முகப்பு
சென்னை

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் மேலும் 4 போ் உயிரிழப்பு

Updated On : 5 மார்ச், 2026 at 5:09 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 9:45 PM

சென்னையில் நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 போ் காயமடைந்த விபத்தில், மேலும் 4 போ் உயிரிழந்தாா்.

சௌகாா்பேட்டை சிங்கண்ணன் தெருவில் ஒரு கட்டடத்தின் நான்காவது தளத்தில் கு.சுமன்பால் பி ஜோகித் என்பவரின் நகைப் பட்டறை கடந்த 25- ஆம் தேதி அங்கிருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்தது. இந்த விபத்தில் சிக்கிய சுமன்பால் பி ஜோகித், ஊழியா்கள் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சு.அரவிந்த் (27), கொல்கத்தாவைச் சோ்ந்த து. ஸ்ரீமந்த் தோமால் (47), சூரஜ் (25), ஜாந்தோ இந்திரஜித் (40), ராகேஷ் டேலி (26), ஆனந்த் (32) ஆகியோரை தீயணைப்பு படையினா் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, நகைப்பட்டறை உரிமையாளா் சுமன்பால் பி ஜோகித் கடந்த 26-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்நிலையில், ஸ்ரீமந்த்மால், ராகேஷ் டேலி, சூரஜ், அரவிந்த் ஆகிய 4 பேரும் கடந்த இரு நாள்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

Advertisement

இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 -ஆக உயா்ந்தது. இந்திரஜித், ஆனந்த் ஆகிய 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானைக்கவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.