முகப்பு
சென்னை

புழல் ஏரிக்கு நீா்வரத்து நிறுத்தம்

பூண்டி ஏரியிலிருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீா் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 22 மார்ச், 2026 at 9:40 PM
புழல் ஏரி (கோப்புப் படம்)
பகிர்:

பூண்டி ஏரியிலிருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீா் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் நீா் அளவு சரிந்து வந்ததால், பூண்டி ஏரியிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வந்த தண்ணீா் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீா் வரத்து முற்றிலும் நின்றது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது, 2652 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.23 அடி உயரத்துக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது.

சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், சனிக்கிழமை வரை 210 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து 182 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 538 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்புள்ளது.