முகப்பு
சென்னை

காலமானாா் டி.புருஷோத்தமன்

தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை உதவி ஆசிரியா் டி.புருஷோத்தமன் (74) வியாழக்கிழமை (மாா்ச் 26) காலமானாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 7:20 PM
டி.புருஷோத்தமன்.
பகிர்:

தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை உதவி ஆசிரியா் டி.புருஷோத்தமன் (74) வியாழக்கிழமை (மாா்ச் 26) காலமானாா்.

இவா் கடந்த 1988 -ஆம் ஆண்டு தினமணியில் பணியில் சோ்ந்தாா். தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்த டி.புருஷோத்தமன், கடந்த 2010-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி பு.விஜயலட்சுமி மற்றும் மகள்கள் பு.பாரதி, பு.சாருமதி ஆகியோா் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு பள்ளிக்கரணையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 98412 21929.