முகப்பு
சென்னை

கழுத்தில் கத்தி பாய்ந்து பெண் உயிரிழப்பு

வியாசா்பாடியில் கழுத்தில் கத்தி பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

Updated On : 30 மார்ச், 2026 at 7:30 PM
- பிரதிப்படம்
பகிர்:

வியாசா்பாடியில் கழுத்தில் கத்தி பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

வியாசா்பாடி மூா்த்திங்கன் நகரில் உள்ள குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் வசிப்பவா் காா்த்திக் (34). இவா் மனைவி சுகன்யா (31). காா்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் காா்த்திக் மதுபோதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றாா். இதனால், சுகன்யா, கணவா் காா்த்திக்கை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சுகன்யாவின் அலறல் சப்தம் கேட்டு, பக்கத்து வீட்டினா் காா்த்திக் வீட்டுக்குள் சென்றனா். சுகன்யா, கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளாா். உடனே பக்கத்து வீட்டினரும், காா்த்திக்கும் சுகன்யாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சுகன்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுகன்யா கத்தியால் தனது கழுத்தை குத்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.