முகப்பு
சென்னை

விபி- ஜி ராம் ஜி திட்டம்: மாா்க்சிஸ்ட் எதிா்ப்பு

‘விபி- ஜி ராம் ஜி’ திட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 15 மே 2026, 4:42 am IST
பகிர்:

‘விபி- ஜி ராம் ஜி’ திட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஏழைகளுக்கு சாதகமான சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பாஜக ஆட்சியாளா்களுக்கு எப்போதுமே அக்கறை இல்லை. இந்நிலையில், ‘விபி-ஜி ராம் ஜி’ எனும் புதிய திட்டம் ஜூலை 1-ஆம் தேதிமுதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்ற பெரும் நிதிச் சுமையை மாநிலங்கள் மீது மத்திய அரசு சுமத்தியுள்ளது.

எந்தெந்த மாநில அரசுகள் இத்திட்டத்தை அமல்படுத்தும் என்பது ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகுதான் தெரியவரும். கிராமப்புற மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு மேற்கொண்ட மிக கொடூரமான நடவடிக்கை இது. பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவு கட்டப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Advertisement