காஞ்சிபுரம்

மூலிகைப் பண்ணையை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள்

தினமணி

உத்தரமேரூர் அருகேயுள்ள மூலிகைப் பண்ணையை கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.

உத்தரமேரூரை அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை மூலிகைப் பண்ணை உள்ளது. இங்கு, ஏராளமான அரிய வகை மூலிகை மரங்களும், செடிகளும் உள்ளன.

சென்னை தேனாம்பேட்டை ஜெ.பி.ஏ.எஸ். மகளிர் கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை இந்தப் பண்ணையை பார்வையிட வந்தனர். இங்குள்ள ருத்ராட்சம், ஆப்பிள், ஸ்டிராபெர்ரி உள்ளிட்ட செடிகளைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

அப்போது அவற்றின் பயன்கள், மருத்துவ குணங்கள் குறித்து மூலிகைப் பண்ணை நிறுவனர் மாசிலாமணி, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார்.

பண்ணையின் ஒரு பகுதியிலுள்ள விளை நிலத்தில், விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்திருந்தனர்.

இதைக் கண்ட மாணவிகள், வயலில் இறங்கி கத்திரி செடிகளை நடவுசெய்தனர்.

இதுகுறித்து மாசிலாமணி கூறுகையில், இயற்கை விவசாயம் செய்தால் தான் மனிதர்கள் நோய், நொடி இன்றி வாழ முடியும்.

எனவே, இயற்கை விவசாயம் குறித்து தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொண்டு இயற்கையோடு ஒன்றி வாழ பழகிட வேண்டும் என்றார். பின்னர், மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT