காஞ்சிபுரம்

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் நிர்வாகியை விடுவிக்க வேண்டும்: ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு

DIN

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகியை விடுவிக்க வேண்டும் என அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி ஆகியோரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
 விரால்பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கடந்த 14-ஆம் தேதி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்  பி.அன்பரசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வா.பிரமிளா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். போராட்டத்தின் பலனாக வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு டாஸ்மாக் கடையை மூடினர். இந்நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்ற பி.அன்பரசு மீது போலீஸார் பொய் வழக்குப்போட்டு, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இதர அமைப்புகளைச் சேர்ந்த ம.பா.நந்தன், வா.பிரமிளா உள்பட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்ள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT