தனியார் பள்ளிகளில் 39 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் 39 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
காஞ்சிபுரம்தனியார் பள்ளிகளில் 39 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் 39 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் 39 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சிபிஎஸ்இ, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், நர்சரி தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றில் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நீதிமன்ற ஆணைப்படியும், ஆட்சியர் உத்தரவுப்படியும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வுக்காக, முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தீத்தடுப்பு பாதுகாப்புத் துறை, சிஎம்டிஏ-டிடிசிபி, மின்சாரத்துறை அலுவலர்கள் அடங்கிய 39 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஏப்ரல் 30 முதல் மே 15ஆம் தேதி வரை அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு நடத்துகின்றனர்.
ஆய்வில், பள்ளிகளின் சான்றிதழ், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும், ஆய்வு அலுவலர்கள் துறைவாரியாக ஆவணப்படுத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து, ஆட்சியர் மூலம் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு அறிக்கை அளிக்கப்பட உள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.