காஞ்சிபுரம்

மின்னணு பத்திரப் பதிவு முறையை  ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

DIN

மின்னணு பத்திரப் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, ஸ்ரீபெரும்புதூர் வட்டார தட்டச்சர்கள் மற்றும் நில விற்பனையாளர்கள் சங்கத்தினர்  ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
பத்திரப் பதிவுத் துறையில் கடந்த 12-ஆம் தேதி முதல்  மின்னணு பத்திரப் பதிவு முறையை பதிவுத் துறை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் தட்டச்சர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் நில விற்பனையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதன் ஒரு பகுதியாக மின்னணு பத்திரப் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, ஸ்ரீபெரும்புதூர் வட்டார தட்டச்சர்கள் மற்றும் நில விற்பனையாளர்கள் சங்கத்தினர், ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஸ்ரீபெரும்புதூர் தட்டச்சர்கள் மற்றும் நில விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நில விறப்னையாளர் சங்க நிர்வாகி சரவணன்,  பழனி, ஆவண எழுத்தர் சங்கத்தின்  நிர்வாகிகள் ஜெகதீசன்,  ஹரிஹரன்,  பொம்மி,  சலோமினா, உள்ளிட்ட ஆவண எழுத்தர்கள், தட்டச்சர்கள், நில விற்பனையாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT