காஞ்சிபுரம்

மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் இன்று தொடக்கம்

DIN

மதுப்பழக்கத்துக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. 
மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவொளி தீபம் கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. 
இதில், தெருமுனை பிரசாரம், வீதி நாடகங்கள் ஆகியவை ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரில், மார்ச் 15 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில், பொதுமக்கள் அதிகளவில் கூடும் 39 இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என மாவட்ட கலால் உதவி ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு!

SCROLL FOR NEXT