காஞ்சிபுரம்

டெங்கு: காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

DIN


நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் பொன்னையா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
டெங்கு கொசுக்களுக்கான உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் டெங்கு கள ஆய்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட குப்பைக் கிடங்கு, கழிவு நீரேற்று நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, பெருநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு, அறப்பணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆய்வு செய்தார். 
அப்போது திருக்காலிமேடு, அறப்பணஞ்சேரி பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் வீசப்பட்டு சுகாதாரச் சீர்கேடு நிலவியது. இதைக் கண்ட ஆட்சியர், நகராட்சி அலுவலர்களும், ஊழியர்களும் விரைந்து சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்குமாறு உத்தரவிட்டார். 
மேலும், காஞ்சிபுரத்தில் சேகரிக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் திறந்தவெளி பகுதியில் கொசுப் புழுக்கள் ஏதேனும் உற்பத்தியாகியுள்ளனவா? என்று ஆட்சியர் ஆய்வு செய்தார். 
அதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து உரமாகத் தயாரிக்கப்படும் வளாகத்தில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்தார். 
மேலும், அப்பகுதியில் புதிதாக வேதியியல் முறையில் குப்பைகளை மக்க வைத்து உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆட்சியர் பார்வையிட்டார். 
அதோடு, மக்கும் உரங்கள் உற்பத்தி பயன்படுத்துதல் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் சர்தார், பொறியாளர் மகேந்திரன், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் தீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT