காஞ்சிபுரம்

உத்தரமேரூர் பாலசுப்பிரமணியர் கோயிலில் சூரசம்ஹாரம்

DIN


உத்தரமேரூர் பாலசுப்பிரமணியர் கோயிலில் சூரசம்ஹார உற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
உத்தரமேரூர் பாலசுப்பிரமணியர் கோயில் திருப்புகழ் பாடல் பெற்ற பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது. இக்கோயிலில், கடந்த வாரம் கொடி யேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக கோயிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் சந்நிதி தெரு, சின்னநாராசம்பேட்டை தெரு, மேட்டுத் தெரு, கருணீகர் தெரு உள்ளிட்ட வீதிகளின் வழியாகச் சென்று, இரவு 9 மணியளவில் பஜார் வீதியை வந்தடைந்தது. அங்கு சூரபத்மனை வீழ்த்தும் சூரசம்ஹார நிகழ்வுகள் வாணவேடிக்கைகளுடன் விமரிசையாக நடைபெற்றது. பின்னர், உற்சவருக்கு தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட உற்சவர் வெள்ளை செட்டி தெரு, எஸ்.பி. கோயில் தெரு, செங்குந்தர் தெரு உள்ளிட்ட மாடவீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT