காஞ்சிபுரம்

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

DIN


திமுகவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் கண்டனப் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களை வரும் 25ஆம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நகரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, கிழக்கு மாவட்டச் செயலர் ச. ராஜேந்திரன், மத்திய மாவட்டச் செயலர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT