காஞ்சிபுரம்

மே தினம்: மதுக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

DIN


மே தினத்தையொட்டி மதுக் கடைகளை மூடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003-விதி 12 மற்றும் உரிம நிபந்தனைப்படி குறிப்பிட்ட நாள்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. 
அதன்படி, அனைத்து இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு  மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மே தினத்தன்று (புதன்கிழமை) மூட வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. 
எனவே, மே தினத்தன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபான விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.  
விதிகளை மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT