காஞ்சிபுரம்

ஏரி குடிமராமத்துப் பணிகள்: பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வெள்ளாரை, எடையார்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் என்.என்.தியாகராஜன்

DIN

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வெள்ளாரை, எடையார்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் என்.என்.தியாகராஜன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
 பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள எடையார்பாக்கம், நாவலூர், வெள்ளாரை, அழகூர் ஆகிய ஏரிகளில் நடப்பு நிதியாண்டில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 ஏரிகளின் கரைகள், மதகுகள், நீர்வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டும், புதிதாகக் கட்டப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், வெள்ளாரை, எடையார்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் என்.என்.தியாகராஜன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
 இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், இளநிலைப் பொறியாளர் மார்க்கண்டேயன், உதவி பொறியாளர் பாஸ்கரன், விவசாய சங்கத் தலைவர்கள் வெள்ளாரை சந்தானம், நாவலூர் காசி, எடையார்பாக்கம் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT