காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் புராதன சிற்பங்களைப் பார்வையிட்ட அஸ்ஸாம் ஆளுநர்

DIN


சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்துக்கு அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி வெள்ளிக்கிழமை வருகை தந்து அங்குள்ள புராதன சிற்பங்களைப் பார்வையிட்டு கண்டுகளித்தார்.
அவருக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் த.சக்திவேல் மலர்க் கொத்து அளித்து வரவேற்றார். தொல்லியல் துறை அலுவலர் பரணிதரன் நினைவுப் பரிசு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்தபோது வடிக்கப்பட்ட ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயில், குடவரை மண்டபங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ரசித்தார். 
மாமல்லபுரம் சிற்பங்களின் சிறப்புகள் குறித்து தொல்லியல் துறையினர் ஆளுநருக்கு விளக்கினர். ஆளுநர் வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT