காஞ்சிபுரம்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

DIN


திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொன்விளைந்த களத்தூரில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி கிராமப் பெண்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 பொன்விளைந்த  களத்தூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. 
இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அந்த கிராமத்துப் பெண்கள் காலிக்குடங்களுடன் திருக்கழுகுன்றம்-வல்லிபுரம் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர். 
இதனால் அப்பகுதியில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருக்கழுகுன்றம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா, மேலாளர் குமார், திருக்கழுகுன்றம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் கிராமத்தினர் கலைந்துசென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT