காஞ்சிபுரம்

 மாமல்லபுரம், மதுரமங்கலம் அரசுப் பள்ளிகளுக்கு கல்விச்சீர்

DIN


மாமல்லபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாமல்லபுரத்தில்  உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருள்களை மேளதாளங்களுடன் மாமல்லபுரம் கங்கைகொண்டான் மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.
 நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை டி.வி.லதா,  ஒருங்கிணைப்பாளர் கேத்தரின் மேரி பிரமிளா ஆகியோர் வரவேற்றனர். வட்டாரக் கல்வி அலுவலர் எம்.முருகன்  தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு )இ.கவிதா, திருக்கழுகுன்றம் ஆசிரியர் பயிற்றுநர் கெரலின் பெஸி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
 பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எம்.கே.சீனிவாசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்  கு.சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியை எம்.ஜி.யோகாம்பிகை, பள்ளி  மேலாண்மைக்குழு தலைவர் எஸ். பிரேமா உள்ளிட்டோர்  சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து  மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை நிர்மலா நன்றி கூறினார்.
மதுரமங்கலத்தில்...
மதுரமங்கலம் அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் ரூ. 6 லட்சம் மதிப்பில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. 
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மதுரமங்கலம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், வட்டாரக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் லட்சுமி, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முன்னதாக, திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து மேள தாளத்துடன் பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருள்களை மதுரமங்கலம் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். 
இதில், சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.  
இதைத் தொடர்ந்து, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவரும், மதுரமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவருமான குணசேகரன் பள்ளியில் புதிதாக சேர்ந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். 
விழாவில், சென்னை அரிமா சங்கத்தின் சார்பாக ரூ 2.5 லட்சத்தில் பள்ளிக்கு கலையரங்கம்  அமைத்தல் உள்பட  ரூ.6 லட்சம் மதிப்பில் மதுரமங்கலம் கிராம மக்கள் சார்பாக கல்விச்சீர் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT