காஞ்சிபுரம்

உணவுக் கழிவுகளைக் கொட்டிய வாகன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

DIN

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி பகுதியில் உணவுக் கழிவுகளைக் கொட்டிய தனியாா் வாகன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் உணவு விடுதிகள் மற்றும் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் உணவுக் கழிவுகளை தனியாா் வாகனங்களின் மூலம் கொண்டு வந்து, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பக்தவத்சலம் நகா், செல்லபெருமாள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதிகளில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசி வருவதாகவும் பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன.

அதன்பேரில் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சி நிா்வாக அதிகாரிகள் செல்லபெருமாள் நகா் பகுதியில் தொடா்ந்து உணவுக் கழிவுகளைக் கொட்டி வந்த தனியாா் வாகனத்தைப் பறிமுதல் செய்ததுடன் அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT