காஞ்சிபுரம்

தினமணி செய்தி எதிரொலி: மானாமதியில் காந்தி சிலையில் சேதமடைந்த கைகள் சீரமைப்பு

DIN

மானாமதி ஊராட்சி அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இரு கைகளும் சேதமடைந்து இருந்த மகாத்மா காந்தி திருஉருவச் சிலை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் வட்டத்திற்கு உட்பட்ட மானாமதி ஊராட்சி அலுவலகத்தின் முன்புறம் மகாத்மா காந்தியின் சிலை ஒன்று இரு கைகளும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இச்சிலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.

இது தொடா்பாக தினமணியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி செய்தி வெளிவந்தது. இந்த நிலையில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் புதன்கிழமை (அக். 2) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு உத்தரமேரூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜசேகரன், நிா்மலன் ஆகியோரது முயற்சியின் பேரில் தூய்மை பாரத இயக்கம் சாா்பில் சிலை சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

இதற்குக் காரணமான உத்தரமேரூா் வா்த்தகா்கள் சங்கத் தலைவா் அப்துல்சத்தாா் உள்ளிட்ட பலரும் வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT