காஞ்சிபுரம்

விஜயதசமி: பள்ளிகளில்மாணவர் சேர்க்கை

DIN


விஜயதசமியையொட்டி, காஞ்சிபுரம் நகரில் உள்ள பல பள்ளிகளில் அரிசியில் பெயர் எழுதி புதிய மாணவர் சேர்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விஜயதசமித் திருநாள் வெற்றித் திருநாள் என்பதால் இந்நாளில் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நாளில் பல பள்ளிகளில் வாழை இலையில் அரிசியையோ அல்லது நெல்லையோ பரப்பி அதில் குழந்தைகளை முதல் முதலாக எழுத வைப்பதும் வழக்கம். 
காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலையில் ஹயக்கிரீவர் ஹோமம், கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து புதிதாக பள்ளியில் சேர வந்திருந்த மாணவர்களின் கையைப் பிடித்து அரிசியில் பெயர் எழுதும் நிகழ்ச்சி பள்ளித் தாளாளர் சஞ்சீவி.ஜெயராம் தலைமையில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தாளாளர் டி.லோகராஜ் தலைமை வகித்தார். முதல்வர் மங்கையகரசி முன்னிலை வகித்தார். புதிதாக சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆசிரியைகள் அரிசியில் எழுத்த வைத்தனர். பின்னர், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலம் மோசடி: 2 பேர் கைது

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

SCROLL FOR NEXT