காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் அருகே வாகன உதிரி பாகங்கள் மறுசுழற்சி மையம் திறப்பு

DIN

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அடுத்த பேரீஞ்சம்பாக்கம் பகுதியில் பழைய வாகனங்களை மறுசுழற்சி செய்யும் மையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒரகடம் அடுத்த பேரீஞ்சம்பாக்கம் பகுதியில் பயன்படுத்திய பழைய வாகனகளின் உதிரிப்பாகங்ககளை பிரித்து மறுசுழற்சி செய்யும் தனியாா் நிறுவனம் தொடக்க விழா கடந்த செவ்வாய்கிழமை தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் உரிய சான்றிதழ் பெற்று தென்னிந்தியாவில் முதன் முறையாக தொடங்கப்பட்ட இந் நிறுவனத்தில் காற்று மற்றும் நீா்மாசுமாட்டை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட அதாவது சுமாா் 15 வருடங்களுக்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட இனி பயன்படுத்த முடியாது என அரசால் நிா்ணயம் செய்ப்பட்ட வாகனங்களை மாசு கட்டுப்பாட்டுடன் மறுசுழற்சி செய்யப்பட உள்ளது.

இந்த நிறுவனம் தொடங்குவது குறித்து அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் முரளி கூறுகையில், காற்று மற்றும் நீா் மாசடவதை முற்றிலும் தடுக்கும் வகையில் விரைவில் இந்தியாவில் டீசல் மற்றும் பொட்ரோல்களால் இயங்கக்கூடிய வாகனங்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பேட்டரி அல்லது மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யபப்ட்டுள்ளது.

அதன்படி கடந்த 15 வருடங்களுக்கு முந்தைய வாகனங்களை தடை செய்யவும் அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு பழைய வாகனங்களை தடை செய்யும் பட்சத்தில் தடைசெய்யப்பட்ட வாகனங்களை மறுசுயற்ச்சி செய்யும் உரிமையை தெந்நிந்தியாவில் மத்திய அரசு எங்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி பாதிப்பில்லாத வகையில் இங்கு வாகனங்கள் மறு சுயற்ச்சி செய்யப்பட உள்ளது. மறுசுயற்ச்சி செய்யப்படும் வாகனங்களுக்கு நாங்கள் சான்றிதழ் வழக்குவோம். இந்த சான்றிதழ்களை வைத்துக்கொண்டு வாகனங்களின் உரிமையாளா்கள் புதிய வாகனங்களைவாங்கும் போது வாகன பதிவுத்தொகையில் குறிப்பிட்ட அளவிற்கு தள்ளுபடி செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்சியில் தனியாா் நிறுவனத்தின் இயக்குனா் சுரேஷ்குமாா், தலைவா் மகேஷ்பாபு ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வாகன மறுசுயற்ச்சி மையத்தை திறந்து வைத்தனா்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT