காஞ்சிபுரம்

ஹுண்டாய் நிறுவனம் சார்பாக 53 பயனாளிகளுக்கு கறவை மாடுகள்

DIN


கிராமப்புற எளியோர்களின் வருவாய்ப் பெருக்குத் திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட 53 பயனாளிகளுக்கு ஹுண்டாய் நிறுவனம் சார்பாக விலையில்லா கறவை மாடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அதன் ஒருபகுதியாக கிராமப் புற ஏழை எளியோர்களின் வருவாய்ப் பெருக்குத்திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட 53 பயனாளிகளுக்கு ரூ.35.76 லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
ஹேண்ட்-இன்-ஹேண்ட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு தேர்வு  செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கான முதற் கட்ட பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  ஹுண்டாய் நிறுவனத்தின் திட்ட மேலாளர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.வேல்முருகன் தொடங்கிவைத்தார். 
இதில் ஹேண்ட்-இன்-ஹேண்ட் தொண்டு நிறுவனத்  துணைப் பொது மேலாளர்  சந்திரகுப்தா,  திட்ட மேலாளர் சொக்கநாதன் ஆகியோர் பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி,   கால்நடை வளர்ப்பு, தீவனம் வழங்க வேண்டிய முறைகள், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும் பயிற்சி  அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT