காஞ்சிபுரம்

டெங்கு தடுப்புக்காக கொசு மருந்து

DIN


டெங்குவை தடுக்க மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி  சார்பில் வியாழக்கிழமை கொசு மருந்து புகை வாகனம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டனர். 
டெங்கு, டிப்தீரியா உள்ளிட்ட மர்மக் காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறை டெங்கு மற்றும் டிப்தீரியாவை தடுக்கும் நடவடிக்கை மேற்கொண்டு நகராட்சி பேரூராட்சி என ஊழியர்களை அதிகப்படுத்தி கொசு மருந்து தெளிப்பான், வாகனங்கள் மூலம் டெங்கு கொசுவைத் தடுக்கும் புகை அடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டதையடுத்து, மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) லதா, துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் மேற்பார்வையில், மாமல்லபுரம் பேருந்து நிலையம் , கங்கை கொண்டான் பகுதி, ஒத்தை வாடைத்தெரு, கடற்கரைக் கோயில் பகுதி, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொசுவை அழிக்கும்  புகை மருந்து அடிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT