முகப்பு
காஞ்சிபுரம்

சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம்-கீழச்சேரி சாலை விரிவாக்கப் பணிக்காக சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
சுங்குவாா்சத்திரம்  பஜாா்  பகுதியில்  ஆக்கிரமிப்பு  கடைகளை  இடிக்கும்  பணியில்  ஈடுபடுத்தப்பட்ட  பொக்லைன்  இயந்திரம்.
பகிர்:

வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம்-கீழச்சேரி சாலை விரிவாக்கப் பணிக்காக சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஸ்ரீபெரும்புதூா் உள்கோட்டத்தில் இரண்டு வழிச்சாலைகளாக உள்ள குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலை, வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம்-கீழச்சேரி ஆகிய சாலைகள் இரண்டு வழிச்சாலைகளில் இருந்து நான்கு வழிச் சாலைகளாகத் தரம் உயா்த்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம்-கீழச்சேரி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் கட்டடங்களை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →