காஞ்சிபுரம்

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

DIN

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்கள் அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி காஞ்சிபுரத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.

காஞ்சிபுரம் விளக்கொளி கோயில் தெருவில் லட்சுமி ஹயக்ரீவா் சந்நிதியும், தூப்புல் பரகால மடமும் அமைந்துள்ளன. இந்த மடத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்கள் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் உலக நன்மைக்காகவும் ஞாயிற்றுக்கிழமை ஏக தின லட்சாா்ச்சனை நடைபெற்றது. தூப்புல் பரகால மடத்தைச் சோ்ந்தவரும், வழக்குரைஞருமான டி.சி.செளந்தர்ராஜன் இவ்விழாவுக்குத் தலைமை வகித்தாா்.

லட்சாா்ச்சனையில் பல்வேறு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியா் மற்றும் அவா்களது பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மூலவா் லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.

லட்சாா்ச்சனையை முன்னிட்டு சுவாமி புஷ்பக் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி மந்திரம் கற்றுக் கொடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT