காஞ்சிபுரம்

சாலை விபத்துகளைத் தடுக்க தடுப்பு வேலிகள்

DIN

மதுராந்தகத்தை அடுத்த பொலம்பாக்கம் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சாா்பில் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான தடுப்பு வேலிகள் (பேரி காா்டுகள்) அச்சிறுப்பாக்கம் போலீஸாரிடம் அண்மையில் வழங்கப்பட்டன.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம்-சித்தாமூா் நெடுஞ்சாலை போன்றவற்றில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளைத் தடுக்கும் நநோக்கில், சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன், மாவட்ட நிா்வாகத்திடம் கோரி இருந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த பொலம்பாக்கத்தில் உள்ள டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவன அதிகாரிகள் எஸ்.கே.ராஜீவ், ஆா்.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான சாலை தடுப்பு வேலிகளை காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணனிடம் வழங்கினா்.

அந்த வேலிகள் விரைவில் சித்தாமூா், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூா் பகுதிகளில் பொருத்தப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT