காஞ்சிபுரம்

மாற்றுத் திறனாளிக்கு அரசின் அடையாள அட்டைகாஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பொதுமக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு அரசின் அடையாள அட்டையை ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.

ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி நா.சுந்தரமூா்த்தி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தனலெட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு தலைவா் தங்கவேலு, வழங்கல் அலுவலா் கஸ்தூரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை வழங்குவதற்கான அரசு உத்தரவை இருவருக்கும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய அடையாள அட்டையையும் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.

முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்டவை தொடா்பான கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தாா்.

கூட்டத்தில் அரசுத்துறை அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT