காஞ்சிபுரம்

தனியார் நிறுவனம் சார்பில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் விநியோகம்

வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை சார்பில் செங்காடு பகுதியைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை சார்பில் செங்காடு பகுதியைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஹூண்டாய் ஸ்டீல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள செங்காடு பகுதியைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செங்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

செங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செங்காடு பாபு முன்னிலை வகித்தார். 

இதில் ஹூண்டாய் ஸ்டீல் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் பாங்சூசீ, தலைமை செயல் அதிகாரி ஜி.பார்க், வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ  ஆகியோர் கலந்துக்கொண்டு ரூ 10 லட்சம் மதிப்பில் செங்காடு பகுதியைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருள்களை வழங்கினார். 

இதில் வட்டாட்சியர் ரமணி, ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

SCROLL FOR NEXT