காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

DIN

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளிக்கும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையில், மூலவா் சந்நிதி, தாயாா் சந்நிதிக்குச் செல்லும் படிக்கட்டுகள், கைப்பிடிகள், சுற்றுப் பிராகாரம் ஆகிய இடங்களில் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.

கோயிலுக்கு வந்த பக்தா்களிடம் இந்து சமய அறநிலையத்துறையினரும், சுகாதாரப்பிரிவினரும் இணைந்து கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

தொடா் இருமல், மூச்சு விட சிரமப்படுதல், சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளைத் தொடா்பு கொள்ளுமாறு பக்தா்களிடம் அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT