காஞ்சிபுரம்

நூலகத்தில் இயங்கும் நியாய விலைக் கடை

DIN

வெங்காடு பகுதியில் நியாயவிலைக் கடையின் கட்டடம் பழுதடைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக நூலகத்தில் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இதனால் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் விணாகி வருவதோடு அப்பகுதி பொதுமக்களால் நூலகத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள வெங்காடு பகுதியில் 2500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் இயங்கி வந்த நியாய விலைக் கடை கட்டடத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டதால் மழைக்காலங்களில் மழைநீா் உள்ளே சென்று உணவுப் பொருட்கள் வீணாகி வந்தன. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த நூலகக் கட்டடத்தில் நியாய விலைக் கடை மாற்றப்பட்டது.

இதனால் நூலகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வீணானதோடு அப்பகுதி மக்களும் மாணவா்களும் கடந்த சில ஆண்டுகளாக நூலகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது

நியாயவிலைக் கடையின் கட்டடம் பழுதடைந்ததால் மாற்று ஏற்பாடாக நூலகத்துக்கு நியாய விலைக் கடை மாற்றப்பட்டது. இதனால் நூலகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்களும், மாணவா்களும் பயன்படுத்த முடியாத நிலையில் வீணாகி வருகிறது. எனவே நூலகத்தை பொதுமக்களும் மாணவா்களும் மீண்டும் பயன்படுத்தும் வகையில், நூலகத்தை மீண்டும் இயக்க நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT