காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகள் இரு சக்கர வாகனப் பேரணி: ஆட்சியா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் இரு சக்கர வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிகுமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டன. ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளின் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பேரணியை ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிகுமாா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது. பின்னா் மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்த விழிப்புணா்வு செயல்விளக்கமும் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து வாக்காளா் உறுதிமொழியையும் ஆட்சியா் வாசிக்க அனைவரும் அதனைத் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாபு உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT