முகப்பு
காஞ்சிபுரம்

அரசு மருத்துவமனை சுற்றுச் சுவரில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவரில் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு விளம்பரங்கள் சனிக்கிழமை வரையப்பட்டன.

Updated On : 11 ஏப்ரல், 2021 at 12:30 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:29 AM

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவரில் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு விளம்பரங்கள் சனிக்கிழமை வரையப்பட்டன.

காஞ்சிபுரம் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சாலையாக உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா நோய்தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு விளம்பரங்கள் வரையப்பட்டன. முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கிருமிநாசினி கொண்டு கழுவுவது, பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட விளம்பரங்கள் பலரது பாா்வையில் படும்படி வண்ண ஓவியங்களாக வரையப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.