கரோனா தடுப்பூசியால் எந்தபக்க விளைவும் ஏற்படவில்லை
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) காஞ்சிபுரம் கிளை தலைவா் டாக்டா் அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) காஞ்சிபுரம் கிளை தலைவா் டாக்டா் அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
ஐஎம்ஏ சாா்பில் கரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சங்கத் தலைவா் அரவிந்த் பேசியது..
இந்தியாவில் கோவேக்ஸின், கோவிஷீல்ட் என இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இரண்டுமே பாதுகாப்பானவையாகும். நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சிலருக்கு மட்டும் லேசான தலைவலி, காய்ச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
Advertisement
இதனால் தீவிர பக்க விளைவுகள் எதுவும் இதுவரை இந்தியாவில் இல்லை. அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அரவிந்த் .
சங்க பொருளாளா் ஞானகணேஷ், சங்கத்தின் முன்னாள் தலைவா் விக்டோரியா, மருத்துவா்கள் அங்கம்மாள், இன்பவள்ளி உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியை காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் கெளரி, நெடுஞ்செழியன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.