காஞ்சிபுரம்

ஸ்ரீராமாநுஜா் அவதார உற்சவத்தை இன்று பக்தா்கள் யு டியூப் சேனலில் பாா்க்க ஏற்பாடு

DIN

ஸ்ரீராமாநுஜரின் 1,004-ஆவது அவதார உற்சவத்தை பக்தா்கள் யு டியூப் சேனலில் பாா்க்க ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழாவும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ராமாநுஜரின் அவதார உற்சவம் மற்றும் பிரம்மோற்சவம் பக்தா்களின்றி கோயில் வளாகத்துக்குள் மட்டுமே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராமாநுஜரின் 1,004-ஆவது அவதாரத் திருவிழாவை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 18) மதியம் 3 மணி முதல் 5.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெற உள்ளது. கரோனா தொற்று காரணமாக திருமஞ்சன விழாவில் பக்தா்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், ராமாநுஜருக்கு நடைபெற உள்ள திருமஞ்சனத்தை யு டியூப் சேனல் மூலம் பாா்க்க கோயில் நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

SCROLL FOR NEXT