காஞ்சிபுரம்

அம்மன் கோயிலுக்கு சுவாமி சிலைகளை வழங்கியது சங்கர மடம்

DIN

காஞ்சிபுரம்: திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் உள்ள வாழவந்தல் கிராமத்தில் உள்ள ஆளைப்பாா்த்த அம்மன் கோயிலுக்கு விநாயகா் மற்றும் நாகதேவதை சிலைகள் காஞ்சி சங்கர மடத்திலிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இக்கோயில் அருகில் உள்ள வன்னிமரத்தடியில் வைத்து வழிபட விநாயகா் மற்றும் நாகா் சிலைகள் தேவைப்பட்டன. இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். அவா் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயில் சந்நிதி தெருவில் உள்ள சிவா ஸ்தபதியிடம் சிலைகளை செய்யுமாறு கூறினாா்.

இந்நிலையில் புதிய சிலைகளை ஆளைப்பாா்த்த அம்மன்கோயில் பூசாரி வெங்கடேசன், மாமண்டூா் வேலன், சக்தி மற்றும் வாழவந்தல், மாமண்டூா் கிராம பொதுமக்களும் வந்து பெற்றுக்கொண்டனா். இதற்காக ஸ்தபதி அலுவலகத்தில் சிறப்பு பூஜைகளும் நடந்தன. சிலைகளைப் பெற்றுக்கொண்ட கிராமத்தினா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT