காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்

DIN

காஞ்சிபுரத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் எஸ்.பி. டாக்டர். எம்.சுதாகருடன் சென்று போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், சமாதனத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 76 பயனாளிகளுக்கு ரூ.49.33லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜீவா,துணை இயக்குநர் வி.கே.பழனி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட  பலருக்கும் ஆட்சியர் பாராட்டுச்சான்றிதழையும் வழங்கினார். 

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் ஆட்சியர் வழங்கினார். 

விழாவில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.எம். சத்தியப்பிரியா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் க.குமார், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா ஆகியோர் உட்பட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் மைதானத்துக்கு வெளியில் இருந்தே பொதுமக்கள் விழாவைப் பார்த்தனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT