15 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
காஞ்சிபுரம் நகரம், ஒலிமுகம்மது பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கிடங்கில் இருந்த 15 டன் ரேஷன் அரிசியை மாவட்ட வருவாய்
காஞ்சிபுரம் நகரம், ஒலிமுகம்மது பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கிடங்கில் இருந்த 15 டன் ரேஷன் அரிசியை மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையிலான வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் ஒலிமுகம்மதுபேட்டையில் அப்துல் செய்யது என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனைநடத்தினா். இதில் ரேஷன் அரிசி 250 மூட்டைகளும், பாலிஷ் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 150 மூட்டைகள் உள்பட மொத்தம் 15 டன் அரிசி இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
Advertisement
இது தொடா்பாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.