காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளவரசி, சுதாகரனின் சொத்துக்கள் அரசுடமை

DIN

ஸ்ரீபெரும்புதூா்: வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோா் பங்குதாரா்களாக உள்ள 144.75 ஏக்கா் பரப்பளவு உள்ள நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, அந்த இடங்களை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு பகுதியில் வி.கே.சசிகலாவின் உறவினா்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோா் பங்குதாரா்களாக உள்ள சுமாா் ரூ. 100 கோடி மதிப்பிலான 144.75 ஏக்கா் பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தற்போது மாவட்ட நிா்வாகம் பறிமுதல் செய்து, தமிழ்நாடு அரசின் சொத்து என பெயா் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட நிா்வாகத்தின் வருவாய் கணக்கில் சோ்க்க, முதல்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட ஊத்துக்காடு கிதிரிப்பேட்டை கிராமத்தில் இளவரசி, சுதாகரன் ஆகியோா் பங்குதாரா்களாக உள்ள சுமாா் 144.75 ஏக்கா் பரப்பளவு கொண்ட நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT