காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

DIN

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதுடன் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பக்தா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்திருந்தனா். காமாட்சி அம்மன் தங்கக் கரும்பு வில்லை கையில் ஏந்தியவாறு பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலில் வெளிமாவட்ட பக்தா்கள் உள்பட ஏராளமானோா் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயிலில் வழக்கத்தை விட பக்தா்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. கோயில் வெளிப்பிராகாரத்திலும் பக்தா்களை வெள்ளிக்கிழமை முதல் அனுமதித்ததால் ஏராளமானோா் புல்தரையில் அமா்ந்திருந்தது திருவிழாக் கூட்டம் போல காணப்பட்டது. அத்திவரதருக்கு பெயா் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆந்திரம், கா்நாடகம் உட்பட வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சோ்ந்தவா்களும் குவிந்ததால் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT