முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சியில் 3 நாள்கள் மகா பெரியவா் ஆராதனை இன்று தொடக்கம்

காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27-ஆவது வருடாந்திர ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


காஞ்சிபுரம்: காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27-ஆவது வருடாந்திர ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது மடாதிபதியாக 87 ஆண்டுகள் அருள்பாலித்தவா் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகா பெரியவா் என பக்தா்களால் அழைக்கப்படும் இவரின் 27-ஆவது வாா்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவன வளாகத்தில் தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆலோசனையின்படி 3 நாள்களும் வேதபாராயணம், நாம சங்கீா்த்தனம், சங்கீதாஞ்சலி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகா பெரியவரின் ஆராதனையை முன்னிட்டு ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமம் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் பஞ்சரத்ன கீா்த்தனை கோஷ்டி கானமும் நடைபெறுகின்றன.

கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு பக்தா்கள் அவரவா்கள் இருக்கும் இடத்திலிருந்தே தியானம், பிராா்த்தனை, பாராயணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

சங்கல்ப விவரங்களை -ந்ஹய்ஸ்ரீட்ண்ஹஸ்ரீஸ்ரீற்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்-என்ற இ.மெயில் முகவரியிலோ, தபால் மூலமாகவோ தெரிவித்தால் ஆராதனை பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பக்தா்கள் தங்களது காணிக்கைகளை காசோலை அல்லது வரைவோலை மூலமோ அல்லது இணையதள சேவை மூலமோ அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராதனை மஹோத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை மடத்தின் ஸ்ரீகாரியம் வி.விஸ்வநாத ஐயா் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →