70 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்த ரியல் மாட்ரிட் வீரர்..! புஸ்கஸ் விருது கிடைக்குமா?
ரியல் மாட்ரிட் அணியின் இளம் வீரர் அர்டா குலேர் அடித்த சிறப்பான கோல் குறித்து...
ரியல் மாட்ரிட் அணியின் இளம் வீரர் அர்டா குலேர் (21 வயது) அடித்த சிறப்பு வாய்ந்த கோல் கால்பந்து உலகில் பேசுபொருளாகியுள்ளது.
எல்ஸி அணிக்கு எதிரான போட்டியில், அர்டா குலேர் கால்பந்துத் திடலின் பாதிக்கும் மேல் பகுதியில் இருந்து, அதாவது 70 மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை சரியாக வலைக்குள் உதைத்து அசத்தியுள்ளார்.
லா லிகா கால்பந்துத் தொடரில் ரியல் மாட்ரிட் அணியும் எல்சி அணியும் இன்று மோதின. இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என அசத்தல் வெற்றிப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில், 89ஆவது நிமிஷத்தில் அர்டா குலேர் 70 மீட்டர் தூரத்தில் இருந்து அடித்த கோல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்த சீசனின் மிகச் சிறந்த கோல் எனப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர் ரியல் மாட்ரிட் அணியில் 2023 முதல் விளையாடி வருகிறார். ஃமிட் ஃபீல்டராக இருக்கும் இவர் இன்று அடித்த கோல் புஸ்கஸ் விருது பெறுமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Real Madrid player Arda Guler who scored from 70 meters away..! Will he get the Puskas Award?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.