FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடிக்க உதவிய எம்பாபே..! ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி!

லா லிகா தொடரில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி குறித்து...

16 செப்டம்பர் 2026, 7:33 pm IST
கோல் அடித்த மகிழ்ச்சியில் ரியல் மாட்ரிட் வீரர்கள். - படங்கள்: ஏபி
பகிர்:

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடரில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்து ரியல் மாட்ரிட் அணி த்ரில் வெற்றி பெற்றது.

தென்கிழக்கு ஸ்பெயின் அணியான எல்சி அணி தனது சொந்த மண்ணில் ரியல் மாட்ரிட்டை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் 3-2 என வென்றது.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் 25, 33ஆவது நிமிஷங்களில் கோல் அடித்த ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலை வகித்தது. பின்னர், இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த எல்சி அணி 71, 83ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தியது.

Advertisement

Advertisement

இதனால் ஆட்டம் பரபரப்பாகச் சென்றது. ஸ்டாப்பேஜ் நேரம் 6 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 90+1ஆவது நிமிஷத்தில் கிளியன் எம்பாபே அசத்தலான அசிஸ்ட் செய்வார். இதனை கார்லோஸ் எஸ்பி கோலாக மாற்றுவார்.

இந்த கோல் மூலம் ரியல் மாட்ரிட் 3-2 என த்ரில் வெற்றியைப் பெற்றது. இருப்பினும் எல்சி அணியின் கம்பேக் அனைவரையும் வியக்க வைத்தது. தோல்வியினால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் எல்சி அணி 56 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். ரியல் மாட்ரிட்டை (430) விடவும் அதிகமான (512) பாஸ்கள் செய்தார்கள்.

லா லிகா புள்ளிப் பட்டியல்

1. பார்சிலோனா - 15 புள்ளிகள் (5 போட்டிகள்)

2. ரியல் மாட்ரிட் - 15 புள்ளிகள் (6 போட்டிகள்)

3. ரியல் பெட்டிஸ் - 12 புள்ளிகள் (5 போட்டிகள்)

4. டெபோர்டிவோ அலாவெஸ் - 10 புள்ளிகள் (6 போட்டிகள்)

5. அத்லெடிகோ மாட்ரிட் - 10 புள்ளிகள் (5 போட்டிகள்)

6. செவில்லா - 10 புள்ளிகள் (5 போட்டிகள்)

summary

Mbappe assists a goal in stoppage time! Real Madrid secures a thrilling victory!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments