எம்பாபே 2 கோல்கள்: தோல்விக்குப் பிறகு வலுவான கம்பேக் அளித்த ரியல் மாட்ரிட்!
லா லிகா கால்பந்துத் தொடரில் கம்பேக் அளித்த ரியல் மாட்ரிட் குறித்து...
லா லிகா கால்பந்துத் தொடரில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ராயோ வலேகானோ அணியை வென்று, வலுவான கம்பேக் அளித்துள்ளது.
முந்தைய (செப்.5) லா லிகா போட்டியில் ரியல் பெட்டிஸ் உடன் 0-1 என ரியல் மாட்ரிட் அணி தோல்வியுற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் ராயோ வலேகானோ உடன் ரியல் மாட்ரிட் தனது சொந்த மண்ணில் மோதியது. இந்தப் போட்டியில் கிலியன் எம்பாபே 2 கோல்கள் (14ஆவது நிமிஷத்தில் பெனால்டி, 90+1ஆவது நிமிஷத்தில்) அடித்து அசத்தினார்.
Advertisement
Advertisement
இவருடன் சேர்ந்து அல்வரே 17ஆவது நிமிஷத்திலும் ஜூட் பெல்லிங்ஹம் 35ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள். ராயோ வலேகானோ அணி 51ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தது.
இந்தப் போட்டியில் 56 சதவிகித பந்தை தங்கள்வசம் வைத்திருந்த ரியல் மாட்ரிட் 514 பாஸ்களை செய்து எதிரணியை திணற வைத்தார்கள். 23 ஷாட்டுகளில் 11 முறை இலக்கை நோக்கி அடித்த ரியல் மாட்ரிட் அணியினர் ஒருமுறை ஆஃப்ஸைடில் தவறிழைத்தனர்.
லா லிகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 12 புள்ளிகள் (4 போட்டிகள்)
2. ரியல் மாட்ரிட் - 12 புள்ளிகள் (5 போட்டிகள்)
3. அலாவெஸ் - 10 புள்ளிகள் (5 போட்டிகள்)
4. செவில்லா - 10 புள்ளிகள் (5 போட்டிகள்)
5. ரியல் பெட்டிஸ் - 9 புள்ளிகள் (4 போட்டிகள்)
6. டெபோர்டிவோ - 8 புள்ளிகள் (4 போட்டிகள்)
La Liga: Kylian Mbappe At The Double As Real Madrid Sink Rayo Vallecano
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.