பெனால்டியை தவறவிட்ட எம்பாபேவின் அணிக்கு சீசனின் முதல் தோல்வியைப் பரிசளித்த ரியல் பெட்டிஸ்!
லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்திய ரியல் பெட்டிஸ் அணி குறித்து...
ஸ்பெயின் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியை 1-0 என ரியல் பெட்டிஸ் அணி வீழ்த்தியது. இதனால், ரியல் மாட்ரிட் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
கடந்த 2021க்குப் பிறகு ரியல் பெட்டிஸ் அணிக்கு எதிரான வெளியூர் ஆட்டத்தில் வெற்றியைப் பெறாமலே இருப்பது ரியல் மாட்ரிட் அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஸ்பெயினில் செவில்லாவின் எஸ்டாடியோ லா கார்டுஜா திடலில் ரியல் பெட்டிஸ் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 1-0 என ரியல் பெட்டிஸ் வென்றது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் முதல் பாதியில் 0-0 என இருந்தது. இரண்டாம் பாதியில் 81ஆவது நிமிஷத்தில் டிராய் பாரட் கோல் அடித்தார். பின்னர், ரியல் மாட்ரிட் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க முடியாமல் சென்றது.
ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90+4 நிமிஷத்தில் தனக்குக் கிடைத்த பெனால்டியை எம்பாபே தவறவிட்டார். இதனால், ரியல் பெட்டிஸ் கோல்கீப்பர் ஆக்ரோஷமாக அவருக்கு அருகில் கூச்சலிடத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில் அந்த அணி மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. பார்சிலோனா முதலிடத்திலும் ரியல் மாட்ரிட் இரண்டாமிடத்திலும் இருக்கின்றன.
Mbappe misses penalty: Real Betis stuns Real Madrid in La Liga!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.