காஞ்சிபுரம்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

ஸ்ரீபெரும்புதூா்: 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில், வாகன ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது.

தேசிய 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதம் ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில், சாலைப் பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டுநா்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, சுங்கச்சாவடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் சிவராஜ் தலைமை வகித்தாா். இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சசி கலந்துகொண்டு, வாகன ஓட்டுநா்களுக்கு சாலை விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம், நன்மைகள், தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, பாதுகாப்பான வேகத்தில் பயணம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கினாா்.

இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT