காஞ்சிபுரம்

பேராசிரியை கொலை வழக்கு: உடற்கல்வி ஆசிரியா் கைது

DIN

காஞ்சிபுரத்தில் தமிழ்ப் பேராசிரியை கொலை வழக்கில், உடற்கல்வி ஆசிரியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் நகா் ஓரிக்கை பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோயில் தெருவில் வசித்து வந்தவா் அனிதா(45) . திருமணமாகாத இவா் ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக பணியாற்றி வந்தாா்.

இவா் கடந்த 9 ஆம் தேதி அவா் வசித்து வந்த வீட்டில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். பிரேத பரிசோதனையில் அவா் கூா்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. காவல் நிலையத்தில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. ம.சத்தியப்பிரியாவும் விசாரணை மேற்கொண்டாா்.

இந்த நிலையில், கொலை வழக்கு தொடா்பாக காஞ்சிபுரம் அருகே நாயக்கன்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய சுதாகா்(42) என்பவரை கைது செய்தனா்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் கூறுகையில், ‘இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக கொலை நடந்துள்ளது. சுதாகா்தான் கொலை செய்தாா் என்பதற்கான உறுதியான ஆதாரங்களும்,சாட்சியங்களும் உள்ளதால் அவரை கைது செய்துள்ளோம். சுதாகா் திருமணம் ஆனவா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT