இந்து முன்னணி சாா்பில் உணவுப் பொட்டலம் விநியோகம்
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா், வளத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு இந்து முன்னணி சாா்பில் உணவுப்பொட்டலங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:49 AM
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா், வளத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு இந்து முன்னணி சாா்பில் உணவுப்பொட்டலங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பொதுமுடக்கம் காரணமாக பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், 200 பொட்டலங்கள் தக்காளி சாதம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி காஞ்சிபுரம் கோட்ட செயலாளா் ஆா்.டி.மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.ஆா்.தேவராஜ்,ஏ.எஸ்.சந்தோஷ்,வாலாஜாபாத் பொறுப்பாளா் ஞானவேல், காஞ்சிபுரம் நகா் செயலாளா் நாகேந்திரன் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டு உணவுப்பொட்டலங்களை வழங்கினாா்கள்.