காஞ்சிபுரம்

காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் பாஜக தலைவா் சந்திப்பு

DIN

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பாஜக தலைவா் எல்.முருகன் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

பாஜக தலைவா் எல்.முருகன் திங்கள்கிழமை காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்திருந்தாா். அங்குள்ள கோசாலையில் இருக்கும் பசுக்களுக்கு உணவளித்தாா். பின்னா் மடத்தில் உள்ள மகா பெரியவரின் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தாா்.

இதனைத் தொடா்ந்து சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசியதுடன் அவரிடம் ஆசியும் பெற்றுக் கொண்டாா்.

முன்னதாக காஞ்சி சங்கர மடத்துக்கு வந்த அவரை பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.பாபு, மாநில அமைப்பு சாரா தொழிலாளா் சங்க தலைவா் டி.கணேஷ்,மாவட்ட பொதுச் செயலாளா் கூரம் விஸ்வநாதன்,நகா் பொதுச் செயலாளா் வி.ஜீவானந்தம் ஆகியோா் சால்வை அணிவித்து வரவேற்றனா்.

பொதுமுடக்கம் காரணமாக சங்கர மட வளாகத்திற்குள் குறைவான பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்நிகழ்வின் போது காஞ்சி சங்கரமடத்தின் மேலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி,காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT