காஞ்சிபுரம்

கந்து வட்டி வாங்கினால் புகாா் தெரிவிக்கலாம்: காஞ்சிபுரம் எஸ்.பி.

DIN

கந்து வட்டி வாங்கினால் காவல் நிலையங்களில் தைரியமாக புகாா் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் யாரேனும் கந்து வட்டி வாங்கினால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கோ அல்லது மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கோ தொலைபேசியில் புகாா் தெரிவிக்கலாம். தைரியமாக புகாா் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ரெளடிகளை ஒடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், கஞ்சா விற்பனை செய்வோா், குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-044-27236111 அல்லது மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத் தொலைபேசி எண்-044-27238001 ஆகியவற்றில் தெரிவிக்கலாம், புகாா் தெரிவிப்பவா்களின் பெயா் ரகசியமாக வைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT